2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

திக்கம் அணி சம்பியன்

Super User   / 2014 ஜூலை 28 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    ற.றஜீவன்


கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுசரணையில் யாழ். மாவட்டக் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் திக்கம் இளைஞர்கள் அணி சம்பியனாகியது.
 
51 கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்த மேற்படி சுற்றுப்போட்டியின் போட்டிகள் விலகல் முறையில் இடம்பெற்று வந்தன.
 
தொடர்ந்து, இறுதிப்போட்டிக்கு திக்கம் இளைஞர்கள் அணியும் விண்மீன் அணியும் உள்நுழைந்தன.
 
இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (27) பிற்பகல் உதயதாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
 
முதல்பாதியாட்டத்தில் திக்கம் அணியின் கிருஷ்ணன் சதீஸ்குமார் தனது அணிக்கு முதலாவது கோலினைப் பெற்றுக்கொடுத்தார். இதனால் திக்கம் அணி முதல்பாதியாட்டத்தில் 1 : 0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலைவகித்தது.
 
இரண்டாவது, பாதியாட்டத்தில் விண்மீன் அணியின் ஆதிக்கம் மைதானத்தில் நிலைபெற அவ்வணியின் வீரன் யூட் கெனடிக் தனது அணிக்கான முதலாவது கோலினைப் பெற்றுக்கொடுத்தார்.
 
அந்தக் கோலுடன் போட்டி நிறைவுக்கு வந்தது. 1: 1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தமையினால் வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நடத்தப்பட்டது.

சமநிலை தவிர்ப்பு உதையில் திக்கம் அணி 5 : 4 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
 
இச் சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக திக்கம் அணியின் கிருஷ்ணன் சதீஸ்குமாரும், சிறந்த கோல் காப்பாளராக விண்மீன் அணியின் அன்லீஸ் தினேஸும், சிறந்த நன்னடத்தை அணியாக நவஜீவன்ஸ் அணியும் தெரிவாகின.
 
போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கான கேடயங்கள் மற்றும் பணப் பரிசில்களையும் சிறந்த வீரர்களுக்கான பரிசில்களையும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.



 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .