2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கல்

Super User   / 2014 ஜூலை 28 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


- தேவ அச்சுதன்


நேபாளத்தில் நடைபெற்ற 8 நாடுகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை கூடைப்பந்தாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட வீரரான ரி.திமோத்தி நிருசனுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு திங்கட்கிழமை (28) வழங்கப்பட்டது.

மே மாதம் 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்டதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவாக மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.மணிவண்ணனின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் பத்தாயிரம் ரூபா வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை திங்கட்கிழமை (28) மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் ஆகியோர் வழங்கி வைத்தனர். இதன்போது மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன், மண்முனை வடக்கு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் பி.ரூபராஜ் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

நேபாளத்தில் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை 3 ஆம் இடத்தை பெற்றது. இப்போட்டியில் பங்குகொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரேயொரு வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X