2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளன்னோர் தோட்ட மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு

Super User   / 2014 ஜூலை 30 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு 75 ஆண்டு நிறைவின்  பவள விழாவில் காலடி வைத்திருப்பதை முன்னிட்டு ஒன்று கூடல் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஹப்புத்தளை கிளனோர் தோட்ட மைதானத்தில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றது.

இந்நிகழ்வில் தோட்ட பொதுமக்கள், இளைஞர், யுவதிகள், சிறுவர்கள் ஆகியோருக்கான வயது அடிப்படையில் கயிறு இழுத்தல், சங்கீத கதிரை, கூடைப்பந்தாட்டம், குறு நாடகம், சிறுவர்களுக்கான பலூண் உடைத்தல், கண்கட்டி முட்டி உடைத்தல், தேசிக்காய் கரண்டி ஓட்டம், கால்பந்தாட்டம் போன்ற பல விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இவ்விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களின் தோட்டத்திற்கு தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை அமைச்சர் மேற்கொள்ளவுள்ளார்.

இவ் ஒன்று கூடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாண விவசாய அமைச்சர் முத்தையா இராமசாமி, மத்திய மாகாண முன்னால் தமிழ் கல்வி அமைச்சரும், இந்தியாவிற்கான இலங்கை உதவித் தூதுவர் அனுஷியா சிவராஜா, ஊவா மாகாண சபை அமைச்சர் முத்தையா இராமசாமி, அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஷ், மாகாண சபை உறுப்பினர்கள், இ.தொ.கா முக்கியஸ்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .