2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உடுத்துறை பாரதி அணி சம்பியன்

Super User   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    ற.றஜீவன்


சுவிஸ் லேபர் அசிஷ்ரன்ஸ் வழிகாட்டலில் வத்திராயன் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் நடத்திய கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழகம் அணி சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியில் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த கழகங்களின் கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.

போட்டிகள் விலகல் முறையில் வத்திராயன் உதயசூரியன் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வந்தது.

தொடர்ந்து, இறுதிப்போட்டி நேற்று வியாழக்கிழமை (31) இடம்பெற்ற போது, உடுத்துறை பாரதி அணியை எதிர்த்து மருதங்கேணி கணேசானந்த அணி மோதியது.

போட்டி நேரத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறவில்லை. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் உடுத்துறை பாரதி விளையாட்டு கழக அணி, 4:3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இச்சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக உடுத்துறை பாரதி அணியின் செல்வராஜா ஜெகமோகனும், சிறந்த கோல் காப்பாளராக மருதங்கேணி கணேசானந்த அணியின் தனபாலசிங்கம் றிஷhனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற அணிகள், மற்றும் சிறந்த வீரர்களுக்கான பரிசில்களை மருதங்கேணி பிரதேச செயலாளர் எஸ்.லிங்கநாதன் வழங்கினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .