2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வேல்ஸ் விளையாட்டுக்கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Super User   / 2014 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  எஸ்.சசிக்குமார்

திருகோணமலை வேல்ஸ் விளையாட்டுக்கழகம்,  கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வை ஏற்படுததும்  முகமாக கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றினை  லீக் அடிப்படையில் ஏற்பாடு செய்தது. 

இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 03.08.2014 காலை 8.30 மணிக்கு ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. முதல் போட்டியில் யங் ஒலிம்பிக்ஸ் கழகத்தை எதிர்த்து நோமன்ஸ் கழகத்தினர் மோத உள்ளனர். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

யங்ஒலிம்பிக்ஸ் கழகம், நோமன்ஸ் கழகம் என்பனவற்றினை 2008ஆம் ஆண்டு இணைத்து வைண் கிண்ணம் என்னும் பெயரில் நடத்தியது. முதலாவது போட்டியில் யங் ஒலிம்பிக்ஸ் கழகம் வெற்றி பெற்றது.

2009ஆம் ஆண்டும் இப்போட்டியினை யங்ஒலிம்பிக்ஸ் கழகம் நடத்தியது. இதில் வேல்ஸ் கழகம் வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்றாவது வருடம் 2010 நோமன்ஸ் கழகம்போட்டியினை  நடத்தியது. இதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். தொடர்ந்து மாறி மாறி மூன்று கழகங்களும் போட்டியினை வருடாந்தம் நடத்தி வருகின்றன.

மூன்றாவது 2010 போட்டி தொடக்கம் ஆறாவது 2013 போட்டி வரை நோமன்ஸ்கழகம் வெற்றி பெற்று வந்துள்ளது.

இவ்வருடம் ஏழாவது தடவையாக இப்போட்டியினை வேல்ஸ் கழகத்தினர் நடத்துகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .