2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தேசியதர கூடைப்பந்தாட்ட மைதானம் யாழில் நிர்மாணிக்க யோசனை

Super User   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். மாவட்டத்தில் தேசிய தரத்தில் கூடைப்பந்தாட்ட மைதானமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின்  செயலகத்தில்  சனிக்கிழமை (09) இடம்பெற்றது.

இதன்போது யாழ். மாவட்டத்தில் கூடைப்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டமாக பொது விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதன்பிரகாரம் நிர்மாணிக்கப்படவுள்ள பொதுவிளையாட்டு மைதானம் தேசியதரத்தில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  கட்டம் கட்டமாக அதன்தரத்தை முன்னேற்றுவதற்கு விசேட கவனம் செலுத்தப்படுமெனவும் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இதன்போது சுட்டிக்காட்டினார்.

யாழ். மாவட்டத்தில் கூடைப்பந்தாட்டத்துக்கென மைதானம் இல்லாத நிலையில் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்கும் அதேவேளை, இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய தீர்வினைப் பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய மைதானத்துக்கான இடத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (11) தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சர்  தெரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .