2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கடலலை நீர்ச்சறுக்கல் சம்பியன் போட்டி

Super User   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொத்துவில் அறுகம்பையில் 2014ஆம் ஆண்டுக்கான கடலலை நீர்ச்;சறுக்கல் சாகச சம்பியன் போட்டியில் கிழக்கு மாகாண அணி சம்பியானது.

பொத்துவில் அறுகம்பையில் வெள்ளிக்கிழமை (08) ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (10) இறுதிப் போட்டி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

ரெட்புள் அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்ட இச்சுற்றுப் போட்டியில் தென்மாகாண மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 22 போட்டியாளர்கள் பங்கு பற்றினர்.

இப்போட்டியில் 288 புள்ளிகளைப்பெற்று கிழக்கு மாகாண அணியினர் சம்பியனானதுடன் தென்மாகாண அணி 143 புள்ளிகளைகளைப் பெற்று 02ஆம் இடத்தைப் பெற்றது.

சுற்றுலாத்துறையின் சொர்க்க புரியாக திகழும் பொத்துவில் அறுகம்பை குடா சேர்பிங் விளையாட்டுக்கு உலகில் 10ஆவது இடத்தையும் தெற்காசியாவில் 03ஆவது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளாத போதிலும் இச்சுற்றுப் போட்டியை கண்டு கழிப்பதற்காக ஆயிரக் கணக்கான உள்ளுர் மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகைதந்திருந்தனர்.

ரெட்புள் நிறுவனத்தின் அதியுயர் பயிற்றுவிப்பாளர் டியகோ நரஞ்சேவின் வழிகாட்டலின் கீழ் இச்சுற்றுப் போட்டி இடம்பெற்றதுடன் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிராணி விஜவிக்ரம கலந்து கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .