2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி சம்பியன்

Super User   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    குணசேகரன் சுரேன், நா.நவரத்தினராசா


செபமாலை நாயகம் ஞானரூபனின் வேகமான ஆட்டத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 2:0 என்ற கோல்களினால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை வென்று அனைத்துப் பல்கலைக்கழக கால்பந்தாட்டச் சம்பியன் ஆகியது.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (08) முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்தது.

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இடம்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கிடையிலான இந்தக் கால்பந்தாட்டப் போட்டியில் 14 பல்கலைக்கழக அணிகள் பங்குபற்றியிருந்தன.

முதற்சுற்று ஆட்டங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்திலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்திலும் இடம்பெற்று வந்தன.

தொடர்ந்து, நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, கிழக்குப் பல்கலைக்கழக அணியையும் தென்கிழக்குப் பல்கலைக்கழக அணி ஊவா அணியையும் வென்று இறுதிக்குள் நுழைந்தன.

இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (10) மாலை இடம்பெற்றது.

போட்டியின் தொடக்கம் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியின் ஆதிக்கம் நிலைபெற, ஞானரூபன் முதலாவது கோலை அடித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து முதற்பாதியாட்டத்தின் இறுதி நிமிடங்களிலும் ஞானரூபன் மேலும் ஒரு கோல் போட்டார். முதல்  பாதியாட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, இரண்டாவது பாதியாட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி தடுப்பாட்டம் ஆடியது. இதனால், கோல் பெறும் சந்தர்ப்பங்கள் குறைந்தன.

இறுதியில் யாழ்;ப்பாணப் பல்கலைக்கழக அணி 2:0 என்ற கோல்கள் கணக்கில் வென்றது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் ஞானரூபன் தெரிவு செய்யப்பட்டார். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .