2025 நவம்பர் 19, புதன்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழக அணியை பாராட்டிய திஸாநாயக்க

Super User   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான வருடாந்த கால்பந்தாட்டப் போட்டியில் 02ஆம் இடத்தைப் பெற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழக வீரர்களை செவ்வாய்க்கிழமை (13) பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பாராட்டிக் கௌரவித்தார்.

 இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணியும், தென்கிழக்குப் பல்கலைக்கழக அணியும் மோதிக் கொண்டன.

இப்போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணியின் வீரர் ஞானரூபனினால் பொடப்பட்ட இரண்டு கோல்களின் உதவியுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணியினர் 2:0 என்ற கோல்கள் கணக்கில் தென்கிழக்குப் பல்கலைக் கழக அணியை வெற்றி கொண்டு சம்பியனானது.

இதேவேளை தென்கிழக்குப் பல்கலைக்கழக கால்பந்தாட்ட திறமை மிக்க பல வீரர்கள் மிகவும் ஆக்ரோசமாக விளையாடிய போதிலும் கோல்கள் எதனையும் போட முடியாமல் போனது.

இலங்கை தென்கிழக்குப் பலகலைக்கழக உடற்பயிற்சி போதனாசிரியர் எம்.எல்ஏ.தாஹீரின் வழிகாட்லின் கீழ் உதைபந்தாட்ட அணியினர் பலசாதனைகளைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X