2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காந்தி விளையாட்டுக்கழகம் சம்பியன்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்


அக்கரைப்பற்று கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் நடத்திய, காந்தி வெற்றிக்கிண்ணம் 2014 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் காந்தி விளையாட்டுக்கழகம் சம்பியனானது.

12 அணிகள் பங்குபற்றிய அணிக்கு 7பேர் கொண்ட 5ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான போட்டிகள் கடந்த 06ஆம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் (13) நிறைவுற்றன. 

கோளவில் தியாகப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (13) இடம்பெற்ற இறுதிப்போட்டியில், அட்டாளைச்சேனை சோபர் அணியும் கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகமும் மோதியது. இதில் 3 விக்கெட்டுக்களால் காந்தி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சோபர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காந்தி அணி 4.1ஓவர் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது.
16ஓட்டங்களை பெற்ற காந்தி அணியின் வீரர் எஸ்.சுரேஸ்வரன் ஆட்டநாயகனாக தெரிவானார்.

இறுதிப்போட்டி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன். தவிசாளர் கே.இரத்தினவேல், பிரதேச செயலக கணக்காளர் க.கேசவன், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் எம்.ஜ.றியாஸ், க.சிவன்செயல் உள்ளிட்ட பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகத்தால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .