2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண விளையாட்டு விழா

Super User   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல், தேவ அச்சுதன் 

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியும் இணைந்து நடாத்தும் மாவட்ட விளையாட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணிக்கு மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் வே.ஈஸ்வரன் கூறினார்.

மட்டக்களப்பு மவாட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை சார்ந்தோர் மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது மரதன் ஓட்டம், கால்பந்தாட்டம், 100 மீற்றர் ஓட்டம், 1500 மீற்றர் ஓட்டம், மற்றும் அஞ்சல் ஓட்டப் போட்டி பல போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் கடந்த வருடம் (2013) தேசியமட்டத்தில் கபடி, கிரிக்கெட், றெஸ்லிங் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும், இவ்வருடம் மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பரிசில்களும் வழங்கப் படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் வே.ஈஸ்வரன் மேலும் தெரிவித்தார்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .