2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்ட பயிற்சி முகாம்

Super User   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட மட். கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற தெரிவு செய்யப்பட்ட 50 ஆண் பெண் மாணவர்களுக்கான கால்பந்தாட்ட பயிற்சி முகாம் வித்தியாலய மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று ஞாயிற்றுக்கிழமையுடன் (24) நிறைவு பெற்றது.

பட்டிப்பளைப் பிராந்திய வேள்ட்விஸன் நிறுவனத்தின் அனுசரணையுடன் உக்டா அமைப்பினால் இப்பயிற்சி முகாம் முன்னெடுக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமின்போது வேள்ட்விஸன் நிறுவன கல்வித்திட்ட இணைப்பாளர் சு.அமுதராஜ் மட். கடுக்காமுனை வாணி வித்தியாலய அதிபர் சு.தேவராஜன், உக்டா அமைப்பின் தலைவர் இ.குகநாதன், பொருளாளர் ம.அருட்செல்வம், பாடசாலையின் விளையாட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் மா.ஜீவரெத்தினம், பயிற்றுவிப்பாளர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பயிற்சி முகாம் முதற்கட்டமாக இப்பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுள்ளதுடன் தொடர்ந்தும்  மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் இருக்கின்ற விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இதுபோன்ற கால்பந்தாட்ட பயிற்சி முகாம்களை பட்டிப்பளைப் பிராந்திய வேள்ட்விஸன் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடாத்த இருப்பதாக உக்டா அமைப்பின் நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .