2025 நவம்பர் 19, புதன்கிழமை

ஒலிம்பிக்ஸ்சை வென்ற ஹட்டன் றினோன்

Super User   / 2014 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.சசிக்குமார்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் பிரிவு 2 சுழற்சி முறையிலான சுற்றுப்போட்டியின்,   ஞாயிற்றுக்கிழமை (24) திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஹட்டன் றினோன் கழகம் திருகோணமலை ஒலிம்பிக்ஸ் கழகத்தை 02:00 என்ற கோல் கண்க்கில் வெற்றி கொண்டுள்ளது.

முதல்கட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 8 கழகங்கள்  பிரீவு 2 போட்டிக்கு தெரிவு செய்ப்பட்டன. இக்கழகங்கள் 2 குழுக்களாக பிரிக்ப்பட்டு சுழற்சி முறையில் போட்டியிடகின்றன.

முதல் அரைப்பகுதியில் 12ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பபெற்ற சுயாதின உதையினை நல்லதம்பி கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார் கோல் காப்பாளரை தாண்டி பந்து கம்பத்துக்குள் வீழ்ந்ததன் மூலம் முதலாவது கோல் பெறப்பட்டது.

பின்னர்  இரண்டாவது அரைப்பகுதியில் 37ஆவது நிமிடத்தில்  கிடைத்த சந்தர்ப்பத்தை யுட் சமயோதிதமாக  கையாண்டு இரண்டாவது கோலை போட்டுக் கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X