2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விநாயகபுரம் மின்னொளி அணி சம்பியன்

Thipaan   / 2014 செப்டெம்பர் 04 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 


ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழகம் நடாத்திய 20 வயதுக்குட்பட்ட  7பேர் கொண்ட கால்பந்தாட்டப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி அணி சம்பியனானது.

கடந்த 31ஆம் திகதி ஆரம்பமான இச்சுற்றுப்போட்டியில் 8 கழகங்கள் பங்குபற்றின. விலகல் முறையில் நடாத்தப்பட்ட போட்டியின் இறுதி சுற்றுக்கு விநாயகபுரம் சுப்பர் ஸ்டார், விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக்கழகங்கள் தகுதி பெற்றன.

இதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற போட்டியில் 1க்கு 0 என்ற அடிப்படையில் விநாயகபுரம் மின்னொளி சம்பியனானது.

உதயம் விளையாட்டுக்கழகத்தின் தவைலர் எம்.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இறுதிபோட்டியில் கலந்து கொண்ட அனுசரணையாளர்கள் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

ஆட்டநாயகனாக மின்னொளி விளையாட்டுக்கழகத்தின் வீரர் எஸ். தனு தெரிவுசெய்யப்பட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .