2025 நவம்பர் 19, புதன்கிழமை

லக்கி கழகம் வெற்றி

Super User   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

  - எஸ்.சசிக்குமார்

இலங்கை கிரிக்கெட் நடத்தும் பிரிவு 2 சுற்றுப்போட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற போட்டியில் மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது.

நிர்ணயிக்கப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களில் லக்கி கழகம் 40.3 பந்து பரிமாற்றங்கள் முடிவில் சகல இலக்குகளையும் இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

லக்கி கழகத்தின் தமிம் 47 ஓட்டங்கள், தனுசன் 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் கு.சக்திபிரணவன் 8.3 பந்து பரிமாற்றங்களில் 52 ஓட்டங்களைக் கொடுத்து 4 இலக்குகளையும், எஸ்.ஜேசுதாஸ் 7 பரிமாற்றங்களில் 17 ஓட்டங்களக்கு 2 இலக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு களம் புகுந்த  திருNகுhணமலை நோமன்ஸ் கழகம் 42.2 பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

நோமன்ஸ் கழகத்தின் ப.சிவசாந்தன் 41 ஓட்டங்கள், ச.சதீஷ்குமார் 32 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் லக்கி விளையாட்டு கழக வீரர் சஞ்சீவன் 8.2 பரிமாற்றங்களில் 34 ஓட்டங்களை கொடுத்து 3 இலக்குகளையும் தனுசன் 10 பரிமாற்றங்களில் 37 ஓட்டங்கனள கொடுத்து 3 இலக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

லக்கி விளையாட்டுக்கழகத்தின் தனுசனின் அபாரமான துடுப்பாட்டம் மூலம் பெற்றுக்கொடுத்த 47 ஓட்டங்களும் பந்து வீச்சின் மூலம் 37 ஓட்டங்களுக்கு  3 இலக்குகளும் நோமன்ஸ் கழகத்தை 44 ஓட்டங்களால் வெல்வதற்கு வழிவகுத்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X