2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களுக்கான கால்பந்து பயிற்சி

George   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ். மாவட்ட கால்ப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிறுவர் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்கள், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (09) சிறுவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள்.

யாழ். மாவட்டத்தை சேர்ந்த சிறுவர் கால்ப்பந்தாட்ட பயிற்சியாளர்களுக்கான கால்ப்பந்தாட்ட பயிற்சி முகாம் கடந்த சனிக்கிழமை (06) முதல் திங்கட்கிழமை (08) வரை சென்.ஜோன்ஸ் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த பயிற்சி முகாமில், சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த பீபா அமைப்பின் உறுப்பினர் வின்சன் சுப்பிரமணியம் கருத்துரைகளையும் பயிற்சிகளையும் வழங்கினார்.

பயிற்சிகளை பெற்றுக்கொண்ட பயிற்சியாளர்கள், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வைத்து சிறுவர்களுக்கான பயிற்சிகளை இன்று வழங்கினார்கள்.

சிறுவர்களுக்கு கால்ப்பந்தாட்டத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி, கால்ப்பந்தாட்டம் விளையாடுவதற்கு அவர்கள் ஊக்கப்படுத்தும் பொருட்டே இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .