2025 நவம்பர் 19, புதன்கிழமை

சுகாதார திணைக்கள விளையாட்டு விழா

Super User   / 2014 செப்டெம்பர் 14 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
- எஸ்.கீதபொன்கலன், எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட, பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் அலுவலகங்களுக்கிடையிலான, நான்காவது வருடாந்த விளையாட்டுப்போட்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் அலுவலகம் இவ் ஆண்டின் சம்பியனாகியது.

திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டரங்கில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (13,14) இப் போட்டிகள் நடைபெற்றன.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதாரசேவை அலுவலகங்கள் மற்றும் கிழக்கு மாகாண சுகாதாரசேவைபபணிப்பாளர் அலுவலகம்; என்பவற்றில் கடமைபுரியும் அலுவலர்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் மற்றும் பெருவிளையாட்டுப் போட்டிகளில் அனைத்து பிரிவுகளிலும் அதிக புள்ளிகளைப்பெற்று மட்டக்களப்பு அலுவலகம் 1ஆம் இடத்தைப்பெற்றது.

மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம்  98 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும்  அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் 62 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தினையும்  திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் 51 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தினையம் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் 47 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தினையும் மாகாணசுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம்  03 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்தனையும் பெற்றுக் கொண்டன.

ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வுவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் எம்.எம்.மன்சூர் வெற்றியாளர்களுக்கான பதக்கங்களையும் கிண்ணங்களையும் வழங்கிவைத்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X