2025 நவம்பர் 19, புதன்கிழமை

கால்பந்தாட்ட வீரர்களுக்கு புதிய சீருடை

Gavitha   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை சென். அந்தனீஸ் விளையாட்டுக் கழகம், கழகத்தின் கால்பந்து வீரர்களுக்கு புதிய சீருடையினை வழங்கி உள்ளது. இந்நிகழ்வு சனிக்கிழமை (20) மாலை மெதடிஸ்த் கல்லூரியில் நடைபெற்றது.

கழக தலைவர் கிளமன் டி சில்வா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனன் பிரதம அதிதியாகவும் திருகோணமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ச. விஜயநீதன் விசேட விருந்தினாகவும் கலந்து கொண்டனர்.
 
1922ஆம் வருடம் இக்கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கழகத்தின் உறுப்பினர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் இணைந்து கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X