2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மேயர் சவால் கிண்ண கடின பந்து கிரிக்கட் போட்டி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு மேயர் சவால் கிண்ண கடின பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி நேற்று (27) சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அப்துல் மனாப், கல்முனை பிர்லியண்ட் கழக பயிற்றுவிப்பாளர் எம்.எம்.பளீல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு 16 அணிகள் பங்கேற்கவுள்ள இச்சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டும் கழகத்திற்கு மேயர் சவால் கிண்ணத்துடன் 25,000 (இருபத்தி ஐயாயிரம்) ரூபா பணப் பரிசும் வழங்கப்படும் என்று முதல்வர் இதன்போது அறிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .