2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் வெற்றி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு


அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம்; மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவiயொட்டி  கழகத்தினால் நாடத்தப்பட்ட கால்பந்து சுற்றுப்போட்டியில் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.

கால்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி நாள் போட்டிகள்  ஞாயிற்றுக்கிழமை(28) விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் வி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

கடந்த இரண்டு வராங்களாக இடம்பெற்று வந்த இச்சுற்றுப்போட்டியில்,    அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்து 36 கால்பந்தாட்டக் கழகங்கள் பங்குபற்றின.

இச்சுற்றுப்போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கால்பந்தாட்டக் கழகமும் (நீல உடை) திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகமும்(மஞ்சள் உடை) இறுதி சுற்றுக்கு தெரிவாகியிருந்தன.

இறுதிச் சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழக அணியை திருக்கோவில் உதயசூரியன் அணி ஒரு கோலினால் வெற்றிகொண்டு கால்பந்தாட்ட கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.

பரிசளிப்பு நிகழ்வில், தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் திருக்கோவில் பிரதேசசபையின் எதிர்கட்சி தலைவருமான சீ.விக்னேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .