Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Administrator / 2015 ஜனவரி 25 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சொர்ணகுமார் சொரூபன்
விக்ரம், ராஜன் மற்றும் கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் வருடாந்தம் நடத்தும் அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின், சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற போட்டியில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் 05 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதியது. நேரம் போதாமையால் 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். பல்கலைக்கழக அணி 29 ஓவர்களில் 08 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டிட்சன் பொற்றிக் 40 ஓட்டங்களையும், என்.சற்குனேஸ்வரன் 33 ஓட்டங்களையும், எம்.தனஞ்செயகுமாரா 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
சென்றலைட்ஸ் அணி சார்பாக, அஜித் டார்வின், கே.கிஷாந்தன் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
163 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய, சென்றலைட்ஸ் அணி, 26 ஓவர்களில் 05 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜேம்ஸ் ஜான்சன் 46 ஓட்டங்களையும், என்.செல்ரன் 32 ஓட்டங்களையும் பெற்றதுடன், அஷகன் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பல்கலைக்கழகம் சார்பாக எஸ்.றொமேஸ் 02 விக்கெட்களை கைப்பற்றினார்.
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் 30 ஓவர்கள் கொண்ட இந்தச் சுற்றுப்போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, ஜொலிஸ்டார் விளையாட்டுக் கழகம், சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம், யாழ்.பல்கலைக்கழக அணி ஆகிய நான்கு அணிகள் பங்குபற்றுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago