Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்
180 மில்லியன் ரூபாய் செலவில் நவீனமுறையில் புனரமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாண வேலைகளை புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் நிறைவுக்குக்கொண்டு வர விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி வேலைகளை விரைவுபடுத்தும் வகையிலான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமைச்சின் அதிகாரிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தைப் பார்வையிட்டு நிறைவடைந்துள்ள வேலைகள் மற்றும் பூர்த்தி செய்யப்படாத வேலைகள் குறித்து பொறியியலாளர்கள் ஒப்பந்தக்காரர் பி.சசிகுமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் வி.ஈஸ்பரன் உள்ளிட்டோருடன், வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடினர்.
மைதானத்தின் வேலைகளை விரைவுபடுத்துமாறும் அதற்கான தேவைகள் ஆலோசனைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கினர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த வெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளியரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்காக நிர்மாணிக்கப்படவுள்ளது.
அத்துடன், 400 மீற்றர் ஓடு தளம், கூடைப்பந்தாட்டக்கூடம், உதைப்பந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், கரப்பந்தாட்டக்கூடம், பட்மின்ரன் தளம் என அனைத்து விதமான விளையாட்டுத் தளங்களும் இங்கு அமைக்கப்படவுள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் வெபர் மைதானம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் அது மாநகர சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
பொறியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்கிய அமைச்சின் குழுவினர் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் விளையாட்டுத்துறை தொடர்பில் நடைபெற்று வரும் வேலைகளைப் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
9 hours ago
07 Jul 2025