2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விளையாட்டு கழகங்களுக்கிடையிலானா வருடாந்த விளையாட்டு போட்டி

Kogilavani   / 2015 மார்ச் 06 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு போட்டியின் ஆரம்பிப்பு நிகழ்வு, கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வீ.எம்.றஜாய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,

தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வி போதனாசிரியர் ஐ.எம்.கடாபி, உடற்கல்வி ஆசிரியர் ரீ.கே.எம்.சிராஜ், சாய்ந்தமருது பிரதேச இளைஞர்; கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜஹான் உள்ளிட்ட விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்;.

முதலபோட்டியாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இவ்விளையாட்டு போட்டியில் கிரிக்கெட், கால்;பாந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எல்லே, கபடி, மெய்வல்லுனர் என்பன இடம்பெறவுள்ளதாக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வீ.எம்.றஜாய் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .