2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நாவற்காடு நாமகள் வித்தியாலயம் சாம்பியன்

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு  மண்முனை  மேற்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட  பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் நாவற்காடு நாமகள் வித்தியாலயம் வெற்றி பெற்றுள்ளது.

மண்முனை  மேற்கு கல்வி கோட்டத்துக்;குட்பட்ட கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு புதன்கிழமை(04) நாவற்காடு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

29 பாடசாலைகள் கலந்துகொண  இந்த விளையாட்டுப்  போட்டி நிகழ்வில், முதலாம் இடத்தினை  நாவற்காடு நாமகள் வித்தியாலயமும் இரண்டாம் இடத்தினை  மகிழ வட்டுவான் மகா வித்தியாலயமும் மூன்றாம் இடத்தினை கன்னன்குடா மகா வித்தியாலயமும் பெற்றுகொண்டன.

கோட்ட கல்வி பணிப்பாளர் த.சோசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .