Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மார்ச் 09 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
யாழ். முஸ்லிம் யுனைட்டட் கால்ப்பந்தாட்ட அணி, புத்தளம் நகரின் பிராந்திய சாம்பியனான லிவர்பூல் கால்ப்பந்தாட்ட அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் நடாத்திவரும் புள்ளிகள் அடிப்படையிலான கால்ப்பந்தாட்ட தொடருக்கான இந்த ஆட்டம், சனிக்கிழமை (07) மாலை புத்தளம் ஸாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த வாரம் புத்தளத்தில் நடைபெற்ற எப்.ஏ.கிண்ண கால்ப்பந்தாட்ட பிராந்திய இறுதி போட்டியில், தமது பின்வரிசை வீரர்களின் காயங்களுக்கு முகம் கொடுத்த லிவர்பூல் அணியினர் இப்போட்டியில் தரமான பின் வரிசை வீரர்கள் இன்றியே போட்டிக்கு களம் இறங்கினர்.
இடைவேளைக்கு முன்பாகவே யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணி 02 கோல்களை புகுத்தி லிவர்பூல் அணியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். எனினும் இடைவேளைக்கு பின்னர் இரு அணிகளுமே ஆக்ரோஷமான ஆட்டத்தில் ஈடுபட்டதால், லிவர்பூல் அணி 03 கோல்களையும் யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணி மேலும் 02 கோல்களையும் புகுத்தியதால் யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணி 04:03 கோல்களினால் வெற்றி பெற்று, 03 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
இப்போட்டியில் யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணியின் கோல் காப்பாளர் எம். ஹஸான் திறமையாக செயற்பட்டு கோல் போகக்கூடிய பல்வேறு சந்தர்ப்பங்களை தனது திறமையினால் தடுத்து நிறுத்தினார்.
போட்டிக்கு நடுவர்களாக எம்.ஏ.எம். பஸ்ரின், எம்.எஸ்.எம். நௌபி, ஏ.ஓ. அசாம் ஆகியோர் கடமையாற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago