Thipaan / 2015 மார்ச் 15 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ், எஸ்.எம்.அறூஸ்
மழைகாரணமாக ஒத்திவைக்கப்பட்ட, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமானது.
அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம். றஸீன் தலைமையில் ஆரம்பமான இன்றைய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இன்றைய முதல் நிகழ்வாக, கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பமானது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 17 கிரிக்கெட் அணிகள் இன்றைய போட்டியில் கலந்து கொள்கின்றன.
இதேவேளை, எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் - எல்லே மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


13 minute ago
19 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
25 minute ago