2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி சம்பியன்

Kogilavani   / 2015 மார்ச் 17 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி சம்பியனாகியது.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரிக்கும் பொத்துவில் அல்-இஸ்ராக் மகா வித்தியாலயத்துக்கும் இடையிலான  கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது, முதலில் துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி அணி, 6 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பொத்துவில் அல்-இஸ்ராக் அணி, 6 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து  42 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தனர்.

இதன் மூலம் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியினர் 16 ஓட்டங்களால்  வெற்றிபெற்று மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .