Thipaan / 2015 மார்ச் 18 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி சம்பியனாகியது.
கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி, பொத்துவில் மத்திய கல்லூரிக்கும் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்துக்கும்(தேசிய பாடசாலை) இடையே பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (18) நடைபெற்றது.
போட்டி நேரம் முடியும் வரை இரு பாடசாலை அணிகளும் கோல் எதனையும் போடாததால் பெனால்டி வழங்கப்பட்டது.
பொத்துவில் மத்திய கல்லூரி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாமிடத்தை அட்டாளைச்சேனை மத்திய மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) பெற்றுக்கொண்டது.
பொத்துவில் மத்திய கல்லூரியின் உடற்கல்வி பொறுப்பாசிரியர் எம்.எம்.அஸ்மியின் பயிற்சியின் கீழ், பொத்துவில் மத்திய கல்லூரி கால்பந்தாட்ட அணி அண்மைக்காலமாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

17 minute ago
21 minute ago
48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
48 minute ago
3 hours ago