Kogilavani / 2015 மார்ச் 19 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட நெடியமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று புதன்கிழமை(19) மாலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் க.ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா, கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, ஏறாவூர்பற்று-2 கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொ.சிவகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களது அணி வகுப்பு மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதோடு, விளையாட்டு நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களை அதிதிகள் வழங்கி வைத்தனர்.
28 minute ago
32 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
32 minute ago
59 minute ago
3 hours ago