Thipaan / 2015 மார்ச் 22 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்ற 15 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்டப் போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி வலிகாமம் கல்வி வலய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
ஆட்ட இறுதி நிமிடத்தில் புனித ஹென்றியரசர் கல்லூரியின் வலது முன்னணி வீரன் நிரோஜன் ஒரு கோலை பெற்று தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், வசாவிளான் மத்திய மகா வித்தியாலயமும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் மோதிக்கொண்டன.
இரு அணிகளும் பலம் பொருந்திய அணிகளாக இருந்த போதிலும் முதற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் பெற எடுத்த முயற்சிகள் எதிரணிகளினால் மாறி மாறி முறியடிக்கப்பட்ட நிலையில் போட்டி சம நிலையில் முடிவடைந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோல் பெற வேண்டும் என்ற துடிப்புடன் இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்ட போதிலும், ஆட்ட இறுதி நிமிடத்தில் புனித ஹென்றியரசர் கல்லூரியின் வலது முன்னணி வீரன் நிரோஜன் ஒரு கோலை பெற்று தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்திய ஒரு நிமிடத்தில் போட்டி முடிவடைந்தது.
ஆட்ட நிறைவில் புனித ஹென்றியரசர் கல்லூரி 01:00 என்ற கோல் கணக்கில் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தை வெற்றி பெற்று வலய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.


16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago