2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விம்பிள்டன் கால்பந்தாட்ட அணி வெற்றி

Thipaan   / 2015 மார்ச் 22 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில், புத்தளம் நகரின் மிகப்பழைமையானதும் பலம் வாய்ந்ததுமான விம்பிள்டன் கால்பந்தாட்ட அணி வெற்றி பெற்றுள்ளது.

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால் தொடராக நடாத்தப்பட்டு வரும் புள்ளிகள் அடிப்படையிலான கால்ப்பந்தாட்ட தொடருக்கான இவ் ஆட்டம் சனிக்கிழமை (21) மாலை நடைபெற்றது.

கல்பிட்டி பேர்ல்ஸ்  அணியும், விம்பிள்டன் அணியும் இந்த ஆட்டத்தில் மோதிக்கொண்டன.

விம்பிள்டன் அணியினர் இப்போட்டியில் தமது  திறமைகளை வெளிக்காட்டி விளையாடியதால் அவ்வணி 03 கோல்களினால் இலகு வெற்றி அடைந்தது.

விம்பிள்டன் அணிக்காக எம்.என்.எம். முஸ்பிக், ஹிமாஸ், வசீம் ஆகியோர்  தலா ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலமாக விம்பிள்டன் அணி மொத்தமாக 08 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளன. போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். நௌபி, எச்.எச். ஹம்ருசைன், எம்.ஆர்.எம். அம்ஜத் ஆகியோர் கடமையாற்றினர்.

விம்பிள்டன் அணிக்கு சுமார் அரை நூற்றாண்டு  காலமாக அதன் பயிற்றுவிப்பாளராக, முன்னாள் தேசிய கால்பந்தாட்ட அணி வீரரும், ஓய்வு பெற்ற சர்வதேச கால்பந்தாட்ட நடுவருமான வைத்தியர் ஏ.எச்.எம். நாளிர் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .