Thipaan / 2015 மார்ச் 24 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
நிந்தவூர் பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான கரப்பந்தாட்டப்போட்டியில், மதீனா விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மதீனா விளையாட்டுக் கழகத்துக்கும் லஹான் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான கரப்பந்தாட்ட இறுதிப்போட்டி, நிந்தவூர் அல்-மதீனா மகாவித்தியாலய மைதானத்தில் நேற்று முன்தினம்(22) நடைபெற்றது.
இதில், 3-2 என்ற செட் வித்தியாசத்தில் மதீனா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜுதீன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், அம்பாறை மாவட்ட கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் சப்ரி நஸார் அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இப்போட்டிக்கு பிரதான நடுவராக ஜே.பஸ்மீர் கடமையாற்றினார்.
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Mar 2026