Kogilavani / 2015 மார்ச் 26 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
கிளிபர்ட் கேடயத்துக்காக நடைபெரும் றகர் சுற்றுப் போட்டியில் கண்டி அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
முதற்தர கழகங்கங்களுக்கிடையே நடத்தப்பட்டு வரும் நீண்டகால வரலாற்றைக் கொண்ட கிளிபர்ட் கேடய நொக்கவுட் றகர் போட்டித் தொடர் கணடி நித்தவலை மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
அறையிறுதி போட்டிக்கு கொழும்பு சீ.ஆர் அணியும் கண்டி அணியும் தகுதிபெற்றிருந்தன.
கணடி நித்தவலை மைதானத்தில் நேற்று நடைபெற்ற அறையிறுதி போட்டியில் 22-7 என்ற புள்ளி அடிப்படையில் கண்டி அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
போட்டியின் இடைவேளை வரை கண்டி அணி 7-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது. 2 கோல், 1 ட்ரை, 1 பெனல்டி மூலம் 22 புள்ளிகளைப் கண்டி அணிபெற்றுகொண்டது. சீ.ஆர், 1 கோல் மூலம் 7 புள்ளிகளைப் பெற்றது.
கண்டி அணி சார்பாக பாசில் மரீஜா, அனுருத்த வில்லவராய, ரிசட் தர்மபால ஆகியோர் ட்ரைகளைப் பெற அவற்றில் இரண்டுக்கு ரொசான வீரரத்ன மேலதிகப் புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்து கோலாக மாற்றினார். மேலும் ஒரு பெனல்டியையும் ரொசான் வீரரத்ன பெற்றுக் கொடுத்து கண்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கடந்த வாரம் முடிவடைந்த லீக் தொடரிலும் கண்டி அணி செம்பியனானமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் (28) சனிக்கிழமை கண்டி நி;த்தவலை மைதானத்தில் கண்டி அணிக்கும் பொலிஸ் அணிக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
16 minute ago
19 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
25 minute ago
31 minute ago