Thipaan / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அக்கரைப்பற்று பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான கரப்பந்தாட்டப் போட்டியில் ஹல்லாஜ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஹல்லாஜ் விளையாட்டுக் கழகத்துக்கும் டோனா விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான இறுதிப்போட்டி தேசிய பாடசாலை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்றது.
இதில் 2-1 என்ற செட்கள் வித்தியாசத்தில் ஹல்லாஜ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கு, அக்கரைப்பற்று கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எம்.ஏ.நவாஸ், செயலாளர் எம்.பி.செய்னுலாப்தீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெற்றி பெற்ற ஹல்லாஜ் கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போட்டிக்குரிய சகல ஏற்பாடுகளையும் விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் மேற்கொண்டிருந்தார்.

3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026