Thipaan / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தும் புள்ளிகள் அடிப்படையிலான கால்பந்தாட்ட தொடருக்கான மற்றுமொரு கால்பந்தாட்ட போட்டி புத்தளம் சாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (04) மாலை இடம்பெற்றது.
புத்தளம் விம்பிள்டன் அணியும் தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணியும் இந்த ஆட்டத்தில் மோதிக்கொண்டன.
இடைவேளைக்கு முன்னதாக விம்பிள்டன் அணி இரு கோல்களை பெற்றுக்கொண்டது.
இடைவேளைக்கு பின்னர் நியூ பிரண்ட்ஸ் அணி ஒரு கோலினை பெற்றபோதும் போட்டி நிறைவடைய 08 நிமிடங்கள் இருக்கும் தருவாயில் நியூ பிரண்ட்ஸ் அணியினருக்கு கிடைக்கப்பெற்ற தண்ட உதையினை அவ்வணியினர் கோலாக்கியதால் 02 : 02 என்ற கோல் அடிப்படையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இதன் மூலம் இரு அணிகளுமே தலா ஒவ்வொரு புள்ளிகளை பெற்றுக்கொண்டன.
போட்டியின் நடுவர்களாக ஏ.ஏ.எம். கியாஸ், எம்.ஐ.எம். அலி, எம்.ரிழா ஆகியோர் கடமையாற்றினர்.

5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago