Kogilavani / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
நிந்தவூர் றியல் இம்றான் விளையாட்டுக்கழகத்தின் 3ஆவது பருவகால மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் இம்மாதம் 11ஆம் திகதி நிந்தவூர் பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இச்சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் அணிகள் விண்ணப்பப் படிவத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து தங்களது பதிவை எதிர்வரும் 8ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் நேரடியாக சமூகமளித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று றியல் இம்றான் கழக சிரேஷ்ட வீரர் எம்.ஆரிப் தெரிவித்தார்.
இதுதொடர்பில் விளையாட்டுக்கழகங்கள் 077-4215394 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முழுமையான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிபெறும் அணிக்கு பெறுமதியான வெற்றிக்கிண்ணத்துடன் 15 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்படவுள்ளது.
இரண்டாமிடம்பெறும் அணிக்கு கிண்ணத்துடன் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளதுடன் தொடரின் சிறந்த வீரர் மற்றும் இறுதிப்போட்டியின் சிறந்த வீரர் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
19 minute ago
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
46 minute ago
3 hours ago