Princiya Dixci / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
மூதூர் வோரியர்ஸ் அணி மற்றும் மூதூர் விக்டோரி அணிகள் பங்குபற்றிய 35 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி, மூதூர் பொது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வோரியர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, வோரியர்ஸ் அணி 32 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது.
வோரியர்ஸ் அணி சார்பாக அஜீத், 26 பந்துகளுக்கு முகங்கொடுத்து 38 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டமாகப் பெற்றார்.
வெற்றி பெறுவதற்கு 228 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடிய விக்டோரி அணி 31.5 பந்துவீச்சு ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பந்துவீச்சில் வோரியர்ஸ் அணி சார்பாக இப்காம், 03 விக்கெட்டுக்களையும் அகிலன், 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் வோரியர்ஸ் அணி, 38 மேலதிக ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
18 minute ago
22 minute ago
49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
49 minute ago
3 hours ago