Kogilavani / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.விஜயவாசகன்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்களுக்கும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சிநேகபூர்வ துடுப்பாட்ட போட்டியில் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள் அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
தேசிய கல்வியியற் கல்லூரியின் வீரசங்கிலியன் விளையாட்டு போட்டி புதன்கிழமை (08) நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.
150 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கல்வியக் கல்லூரி விரிவுரையாளர் அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியடைந்தது.
அணிகளில் சிறப்பாட்டக்காரர்களாக கல்வியக் கல்லூரி விரிவுரையாளர் ம.பிரபாகரனும் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் அ.பௌநந்தியும் தெரிவு செய்யப்பட்டனர்.
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago