2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சம்பியனானது இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி

George   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவினர்களுக்கு இடையே 'ஐங்கரன் மீடியா சொலுசன்' நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  07 பேர் பங்குபற்றும் 'சுப்பர் 16' கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை(10) நடைபெற்ற இறுதிப் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரியும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் மோதிக்கொண்டன.

இரு அணிகளும் இந்தாண்டு மூன்றாவது தடவையாக மோதிக்கொண்ட நிலையில் போட்டி ஆரம்பமாகி முடிவடையும் வரை விறுவிறுப்புக்கு குறைவில்லாது ஆட்டம் காணப்பட்டது.முதற்பாதி ஆட்டத்தில் கோல் பெற இரு அணிகளும் பெரு முயற்சி எடுத்த போதிலும் கைகூடாத நிலையில் ஆட்டம், கோல்கள் எதனையும் பெறாது நிலையில் சம நிலையில் முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் எப்படியும் கோல் பெற வேண்டும் என்ற துடிப்புடன் களமிறங்கிய இரு அணிகளும் மீண்டும் பெரும் முயற்சியை கோல் பெற எடுத்துக் கொண்ட நிலையில் ஹென்றியரசர் கல்லூரி வீரன் சுமன் தனது அணிக்கான முதலாவது கோலை பெற்றுக் கொண்டார்.

இந் நிலையில் விளையாட்டு சூடு பிடித்துக் கொண்டதுடன் இரு அணிகளும் வேகமாகவும் விளையாடத் தொடங்கிய நிலையில் மீண்டும் ஒரு கோலை ஹென்றியரசர் கல்லாரி வீரன் மது பெற்றுக் கொண்ட நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.

ஆட்ட நிறைவில் ஹென்றியரசர் கல்லூரி 02:00 என்ற கோல் கணக்கில் மானிப்பாய் இந்துக் கல்லூரியை வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .