Princiya Dixci / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு உத்தியோகஸ்தர் ஏ.எம்.எம்.றஸீன் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டி, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் சோபர் விளையாட்டுக் கழகமும் சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகமும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சோபர் விளையாட்டுக் கழகம், 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சோபர் விளையாட்டுக்கழகம் உதைபந்தாட்டத்தில் பல வருடங்கள் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago