Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
சுப்பர் ஓக்கிட் லீக் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இப்போட்டி, ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் உதவி அதிபருமான பீ முஹாஜீரின்; தலைமையில் நேற்று முன்தினம் மாலை (26) அல் - ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியூ ஸ்டார் அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
இறுதிப்போட்டியின்போது முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மன் விளையாட்டுக் கழக அணியினர் எட்டு ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
65 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் கழக அணியினர் 7.2 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கட்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டிக் கொண்டனர்.
நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சார்பாக முகம்மட் அஸ்லம் 47 ஓட்டங்களைப் பெற்று கழக வெற்றிக்கு வழியமைத்து போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டதுடன் இச்சுற்றுப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக நியூ ஸ்டார் அணியின் ஐ. றிசாட் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago