Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2015 மே 25 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான இவ்வருடத்துக்கான (2015) வலயமட்ட மீலாத் தினப் போட்டிகள் இம்மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை, 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் அடுத்தமாதம் 2ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளதாக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக இஸ்லாம் பாடத்துக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் யூ.எல்.நியாஸி தெரிவித்தார்.
முதலாம் நாள் (30) போட்டிகள் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலும் இரண்டாம் நாள் (31) போட்டிகள் அட்டாளைச்சேனை அல்-முனீரா பெண்கள் உயர் பாடசாலையிலும் மூன்றாம் நாள் (02) போட்டிகள் மீனோடைக்கட்டில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.
முதலாம் நாள் கிறாஅத், அல்குர்ஆன் மனனம், பேச்சு ஆகிய போட்டிகளும்; இரண்டாம் நாள் கட்டுரை, சிறுகதை, அறபு எழுத்தணி ஆகிய போட்டிகளும் மூன்றாம் நாள் இஸ்லாமிய கலாசார போட்டிகளும் நடைபெறும்.
இப்போட்டிகள் ஆரம்பப்பிரிவு (தரம் 4, 5), கனிஷ்ட பிரிவு (தரம் 6, 7, 8), இடைநிலைப்பிரிவு (தரம் 9, 10, 11), சிரேஷ்ட பிரிவு (தரம் 12, 13) என நான்கு பிரிவுகளாக நடைபெறவுள்ளன. இப்போட்டியில் தெரிவுசெய்யப்படுபவர்கள் கிழக்கு மாகாணமட்டப் போட்டியில் கலந்துகொள்வர்.
இப்போட்டிகளில் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய கோட்டக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
50 minute ago
57 minute ago
3 hours ago