Princiya Dixci / 2015 ஜூன் 03 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு அவை யாழ்.மாவட்ட ஹொக்கி அணிகளுக்கிடையில் நடத்திய ஹொக்கிச் சுற்றுப்போட்டியில் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி சம்பியனாகியது.
சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை (02) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து ஓல்ட் கோல்ட்ஸ் அணி மோதியது.
முதற்பாதியாட்டத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறவில்லை. இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை வீணடித்தன. இருந்தும் போட்டி முடிவடைய 2 நிமிடங்கள் இருக்கும் தருணத்தில் ஓல்ட் கோல்ட்ஸ் அணியின் வி.அருண் ஒரு கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்த கோலுடன் போட்டி நிறைவடைய ஓல்ட் கோல்ட்ஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது.



15 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
2 hours ago