Thipaan / 2015 ஜூன் 03 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- குணசேகரன் சுரேன்
வடமாகாண கல்வி விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டு விழாவின் மென்பந்தாட்டத் துடுப்பாட்ட போட்டியில் 19 வயது ஆண்கள் பிரிவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியும் பெண்கள் பிரிவில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணியும் சம்பியனாகின.
வடமாகாண பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டி 5 கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியாவில் நடைபெற்று வருகின்றன.
இதில் 19 வயதுப்பிரிவு ஆண்கள், பெண்களுக்கான மென்பந்தாட்டப் போட்டி ஓமந்தை மத்திய கல்லூரி, வவுனியா நகர சபை ஆகிய மைதானங்களில் நடைபெற்றன.
ஆண்களுக்கான துடுப்பாட்டப் போட்டியில் வலிகாமம் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி முதலிடம் பெற்றது. இரண்டாமிடத்தை தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும், மூன்றாமிடத்தை வவுனியா வடக்கு கல்மடு மகா வித்தியாலயமும், நான்காவது இடத்தை கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.
பெண்களுக்கான துடுப்பாட்டப் போட்டியில் வலிகாமம் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி முதலிடத்தைப் பெற்றது.
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி இரண்டாமிடத்தையும், வலிகாமம் வட்டு இந்துக் கல்லூரி மூன்றாமிடத்தையும், மன்னார் தட்சணாமருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை நான்காமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
38 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
2 hours ago