George / 2015 ஜூலை 01 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று, அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மாணவன் நா.லவகேஸ்வரன் சாதனை படைத்துள்ளார்.
இம் மாணவனின் சாதனையை கௌரவிக்கும் நிகழ்வு, கடந்த 23ஆம் திகதி பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது பாடசாலை அதிபர் எஸ்.இரவீந்திரன், முகாமைத்துவ பிரதி அதிபர் திருமதி கே.தங்கவடிவேல், கல்வி அபிவிருத்திக்கான பிரதி அதிபர் கே.தயாரூபன், உடற்கல்வி ஆசிரியர் திருமதி ரதி குலராஜா ஆகியோர் கலந்து கொண்டு; லவகேஸ்வரனை பாராட்டினர்.
கடந்த 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இடம்பெற்ற கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில், இம்மாணவன் 5,000 மீற்றர் தூரத்தை 17.27 நிமிடத்திலும் 1,500 மீற்றர் தூரத்தை 04.29 நிமிடத்திலும் ஓடி முடித்து, இரு போட்டியிலும் முதலாம் இடத்தை பெற்று தங்கப்பதக்கம் இரண்டை தனதாக்கினார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தில் பிறந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனக்குக் கிடைத்த குறைவான வளங்களைப் பயன்படுத்தி, பயிற்சிகளைப் பெற்று இன்று திருக்கோவில் பிரதேசம் ஆச்சரியப்படும் வகையில், நா.லவகேஸ்வரன் சாதனை படைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago