2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

26 ஆவது இளைஞர் விளையாட்டு போட்டி

Super User   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தித்திலுள்ள இளைஞர் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற 26 ஆவது இளைஞர் விளையாட்டு போட்டியில் அட்டாளைச்சேனை இளைஞர் கழகம் சம்பியனானது.

இப் போட்டிகளின் இறுதி நாள் விளையாட்டு விழா நிகழ்வு திங்கட்கிழமை (04) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.சிஸிரகுமார தலைமையில் இடம்பெற்றது.

இந்த இளைஞர் விளையாட்டுப் போட்டியில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட இளைஞர் கழகங்களின் வீரர்கள் கலந்து கொண்டதுடன் இப்போட்டிகளில் அட்டாளைச்சேனை இளைஞர் கழகம் சம்பியனானதுடன், இரண்டாமிடத்தை தெஹியத்தகண்டி இளைஞர் கழகம் பெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். முற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிரியாணி விஜயவிக்ரம, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு பாலசூரிய, முன்னால் கிழக்கு மாகாண பணிப்பாளர் பி.செல்வநாயகம், இலங்கை இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான யு.எல்.முகம்மட் சபீர், உட்பட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை மாவட்டத்திலுள்ள இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .