2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

8 விக்கெட்டுகளை வீழ்த்திய பம்பலப்பிட்டி இந்துவின் ரிஷியுதன்

Freelancer   / 2023 நவம்பர் 26 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம், கல்வியமைச்சுடன் இணைந்து நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பிரிவு இரண்டு கடினபந்து கிரிக்கெட் தொடரில், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும், பத்தரமுல்ல ஜயவர்த்தன மத்திய கல்லூரிக்குமிடையிலான போட்டி முல்லேரியா எதிரிவீர சரத்சந்திர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி 126 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பத்தரமுல்ல ஜயவர்த்தன அணி 28 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தாலும், இந்துக் கல்லூரி மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்துவீசி ஓட்டம் எதுவும் கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றி பெரும் சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X