Janu / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு' திறப்பு விழாவும், செட்டிபாளையம் பிரீமியர் லீக் (CPL) கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் கடந்த வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்கள் பதவி வகித்த காலத்தில், அவரது பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வேணுகோபாலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், விளையாட்டு உத்தியோகத்தர்கள், கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது, புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டரங்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
வ. சக்தி


















1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago