2025 ஜூலை 17, வியாழக்கிழமை

"நிவ் ஸ்டார் பிரண்டஸ் கப்" கிரிகெட் சுற்றுப்போட்டி

Super User   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


பொத்துவில் நிவ் ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நிவ் ஸ்டார் பிரண்டஸ் கப்' கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் பொத்துவில், கொட்டுக்கல் டயமண்ட் கிரிக்கட் அணி சம்பியன் கிண்ணத்தை தன்வசமாக்கிக் கொண்டது.

பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம் பெற்று வந்த இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கொட்டுக்கல் டயமென் அணிக்கும் நிவ் ஸ்டார் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இந்த போட்டியில் 5 இழக்குகளினால் கொட்டுக்கல் டயமென்ட் அணி வெற்றியினை தனதாக்கிக்  கொண்டது.

நாhணயச் சுலற்சியில் வெற்றியீட்டிய நிவ் ஸ்டார் கழகம் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொட்டுக்கள் டயமென்ட் அணியிணர் 8 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நிவ் ஸ்டார் அணியிணர் 8 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 6 இழக்குகளை இழந்து 74 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் அனைத்து விளையாட்டு கழக சம்மேள தலைவருமான எஸ்எம்.வாசீத் மற்றும் அதிதிகளாக அனைத்து விளையாட்டு கழக சம்மேளனத்தின் செயலாளர் ஏ.பசூர்கான், இளைஞர் நாடாளுமன்ற உருப்பினர் எம்.ஹில்முடீன் , செலிங்கோ நிறுவனத்தின் பொத்துவில் கிளை முகாமையாளர் எ.மன்சூர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X