2021 ஜூன் 19, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ராக்கி)

பொலன்னறுவை, கல்லெலுவ பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தின் காரணமாக பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதையை குறுக்கிட முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதியே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் இது வரை அடையாளம் காணப்படவில்லை என பொலன்னறுவை பொலிஸ் நிலைய மோட்டார் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளோட்டியை கைது செய்த பொலிஸார், பொலநறுவை  நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி  நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .